உலகம் புடைத்திட, உலவும் புடையிது
-
தென்றல் தந்த வலி
“தென்றல் வந்து தீண்டும்போது…” என்ற பாடலை உலாவியின் ஒரு தத்தலில் ஓடவிட்டுக் கொண்டே அலுவலக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அலுவல் சுமை எவ்வளவு இருந்தாலும், அச்சுமை உள்ளத்தில் எவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவற்றையெல்லாம் தீர்த்து, மனதில் வண்ணங்களைத் தீட்டக்கூடிய, இசைத் தென்றலின் தென்றல் அந்தப் பாடல். பல வண்ணங்களில் எண்ணங்களை வரைந்து துன்பங்களை மறக்கச் செய்யும் அந்தப் பாடல் ஒருவருக்கு வலியைத் தரக் கூடியது என்றால் யாராவது நம்புவார்களா என்ன? 90களில் இசையன்பர்கள் என்றால் அவர்களுக்கு அமுதம்…
-
புலால்நன்று
“செயற்கை செயல்படச் சேர்ந்திடும் இன்பம்இயற்கை இருப்பதே ஈந்திடும் இன்பம்இறவா திடுதிடலி லும்” என்று ஒரு கவிஞர் எழுதியிருப்பார். அது எவ்வளவு உண்மை என்று அன்று உணர்ந்தேன். நாம் பயன்படுத்தும் கருவிகள் செயல்பட்டால் தான் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆனால், இயற்கை அப்படியல்ல. எந்த ஒரு செயல்பாடும் இல்லை என்றாலும், இயற்கை இருப்பதே நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும். என் முன்னே தெரிந்த காட்சி, ஒரு புகைப்படத்தைப் பார்ப்பது போல எந்த அசைவும் இல்லாமல் இருந்தது. ஆனாலும் அந்தக் காட்சியைப்…
-
சிறைச் சாலை
“முகா, நம்ம கல்லூரில ஆந்தையைத் தூக்கிட்டாங்களாம், தெரியுமா?”, என்று சமரன் கூறினான். “என்ன தூக்கிட்டாங்களா? எதுக்கு?”, என்று இன்முகன் வியந்தான். “என்ன? எதுக்கா? சேதி தெரியாதா? ஓ… நீ தான் ஒரு வாரமா ஊர்லயே இல்லல’” “ஆமாடா, ஒரு வாரமா ஒரு கீச்சு கூட போடல” ‘”நீ செஞ்சதுதான்டா சரி. சுற்றுலா போறதே குடும்பத்தோட இரு்க்குறதுக்கு தானே? ஆனா நிறைய பேரு சுற்றுலா போறது கூட படம் எடுத்து முகநூல்ல போடுறதுக்குத்தான்!” “சரி, நம்ம ஆந்தை எப்படி…
-
முத்து வேட்டை
“அம்மா, நான் வேட்டைக்குப் போறேன்”, என்று காலையில் எழுந்ததும் வேகவேகமாகக் காலைக்கடன்களை முடித்துவிட்டு புறப்பட ஆயத்தமாக இருந்த சமரன் கூறினான். “இருடா, சாப்பிட்டுட்டுப் போ”, என்ற சமரனின் தாய் நான்கு இட்லிகளை தட்டில் வைத்து, தக்காளித் தொக்குடன் சமரனுக்குக் கொடுத்தார். அந்தத் தக்காளித் தொக்கு சமரனின் புறப்படும் ஆவலைச் சற்று தள்ளி வைத்தது. தன் தாய் சமைத்திருந்த அந்தத் தக்காளித் தொக்குக்காகவே எவ்வளவு இட்லிகளையும் தின்னலாமே! இட்லியையும் தொக்கையும் சேர்த்து மென்று உள்ளே தள்ளிய அதே நேரம்,…
-
பொமா
பொமா, தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாக ஓடிக் கொண்டிருந்தான். சிறிது தொலைவில் இருந்த சாராபாய் பள்ளத்தாக்கில் ஒரு சிறுவன் விழுந்துவிட்டதாகவும், அவனைக் காப்பாற்றி முதலுதவி செய்ய வெண்டும் என்றும், சற்று முன் பொமாவுக்குத் தகவல் கிடைத்தது. அதனால் முடிந்த அளவுக்கு விரைவாகச் சென்றான். பாலை நில மணலைப் போன்று காய்ந்து இருந்த மண்ணுக்குள் அவனுடைய கால்கள் ஆழமான சுவடுகளை ஏற்படுத்தின. ஆனாலும் பொமாவுக்கு ஓடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. சொல்லப்போனால், அவன் குரங்கைப் போலத் தாவித் தாவி…
-
மூங்கில் இல்லனா என்ன?
கம்பணை முழுக்க சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பொங்கல் விழாவோடு எப்பொழுதும் கொண்டாடப்படும் இங்கோல் விழாவும் நடக்க இருந்ததால் ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. பல ஆண்டுகளாக முரண்பட்டிருந்த பேராசானும் சிற்றாசானும் சில வாரங்களுக்கு முன் ஒன்றுபட்டு இருந்தனர். அதனால் இம்முறை இயல்பை விட கூடுதலாகவே ஊர் களைகட்டியது. இங்கோல் விழாவுக்காக ஒரு திடலைச் சுற்றி மரச்சட்டங்களால் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இருக்கைகள் எல்லாம் நிறைந்து, பலர் இடமில்லாமல் நின்று கொண்டு இருந்தனர். வெளியூர்களில் இருந்து விழாவில் கலந்து கொள்ள…
-
அழையா விருந்தாளி
மூன்று நாட்களாக மழை நிற்காமல் பொழிந்து கொண்டிருந்தது. பல மாதங்களாக வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த அந்த ஊரின் உழவர்களுக்கு அந்த மழை மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொடுத்தது. மகிழ்ச்சியில் அனைவரும் திளைத்துக் கொண்டிருந்தாலும், அங்கு புதிதாக முளைத்திருந்த நெய்தல் நகர மக்களின் மகிழ்ச்சி மங்கிக் கொண்டிருந்தது. நெய்தல் நகர் அங்கு உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, “இயற்கையுடன் வாழ வாருங்கள்!”, “அழகான ஏரியின் அருகில் மனை” என்றெல்லாம் நாளிதழ், தொலைக்காட்சி…
-
சமையற் தோட்டம்
கனியன் அன்றைய நாளுக்கான தன் கூலியை வாங்க மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தான். அவனைப் போலவே அவனுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய குடும்பத்தினரும், மற்ற வேலையாட்களும் காத்துக் கொண்டிருந்தனர். காத்துக் கொண்டிருந்த அனைத்துப் பணியாளர்களும் சிறந்த சமையல்காரர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித பண்டத்தைச் சமைப்பதில் கைதேர்ந்திருந்தனர். உண்ணல், தின்னல், நக்கல், பருகல் என்று நால்வகை உணவுப் பண்டங்களைச் சமைப்பவர்களும் அவர்களில் இருந்தனர். சமைப்பதில் கைதேர்ந்திருந்தாலும், தங்களுடைய மூதாதையர் அளித்த அதே சுவையைக் கொண்டுவர அனைவரும் முயன்றதால்,…
-
கோடைக் கொடை
அரியவன் தன் வீட்டின் முன் அமர்ந்து அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தான். வேம்பு அவர் மேல் வெயில் அடிக்காதவாறு குடை பிடித்துக் கொண்டிருந்தான். அடித்த காற்றில் குடை சற்று அங்குமிங்கும் அசைந்தாலும் அதைச் சரிபடுத்தி, அரியவனின் மேல் வெயில் விழாதவாறு வேம்பு பார்த்துக் கொண்டான். குடை பிடித்துக் கொண்டிருந்தாலும், வேம்பின் கண்கள் அந்தச் செய்தித் தாளின் மீதே இருந்தன. அந்தத் தாளில் அரியவன் என்ன தான் படித்துக் கொண்டிருக்கிறான் என்று அறியும் ஆவலில், அவ்வப்பொழுது தலையைச் சற்று…
-
சேற்றகன்
“அப்பா! அப்பா!”, என்று கத்தி தன் தந்தையை அழைத்துக் கொண்டு, மண்மனம் வீட்டில் இருந்து வெளியே வந்து வேகமாக வயல் வெளிக்கு ஓடினாள். நேரம் கடத்தினால் அது தன் தந்தையின் உயிருக்கே கேடு விளைவிக்கும் என்பது அவளுக்குத் தெரியும். மண்மனத்தின் அச்சத்துக்கான காரணம், வயல் வெளியில் மண்ணை உழுது கொண்டிருந்த சேற்றகனுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் அன்று, அவன் தன்னை மறந்து உழுது கொண்டிருந்தான். தொலைவில் தன் மகள் அச்சத்துடன் தன்னை அழைக்கும் ஒலியைக் கேட்டு, ஒலி…
Got any book recommendations?